மனைவியை கொன்று மூளையை உணவாக தின்ற கணவன் - பின்னணியை கேட்டு ஷாக்கான போலீசார்!

Attempted Murder United States of America Mexico
By Vinothini Jul 08, 2023 06:04 AM GMT
Report

 அமெரிக்காவில் ஒருவர் தனது மனைவியை கொன்று மூளையை உணவில் கலந்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர கொலை

அமெரிக்காவில் மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் அல்வாரோ, 32 வயதான இவர் பேய், பிசாசு குறித்த கருத்தியலில் நம்பிக்கைகொண்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் தன் மனைவி மரியா மான்செராட்டைக் கொலைசெய்ததாகக் தகவல் வெளியானது.

man-killed-his-wife-and-consumed-her-brain

அதனை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியபொழுது ஒரு பிளாஸ்டிக் பையில் மனித உடலின் சில துண்டுகள் கிடந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தியபொழுது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.

பின்னணி

இதனைதொடர்ந்து, போலீசார் அல்வாரோவிடம் விசாரணை நடத்தியதில் அவர் கூறியது "ஜூலை 29-ம் தேதி சாத்தான்தான் இந்தக் குற்றத்தைச் செய்ய உத்தரவிட்டது. அதனால்தான் செய்தேன். என் மனைவியைக் கொலைசெய்து, அவரது முளையை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டேன்.

man-killed-his-wife-and-consumed-her-brain

அவரது தலை மண்டை ஓட்டை எரித்துவிட்டேன். உடல் பாகங்களை அந்தப் பகுதி பள்ளத்தாக்கில் போட்டிருக்கிறேன்" என்று கூறினார். மேலும் இவரது இறந்த மனைவியின் தாயிடம் விசாரிக்கையில், "என் மகளின் கணவர் கோகோயின் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்துக்கொள்வார். அவருக்கு மனநலப் பிரச்னைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.