மனைவியால் கணவர் கொடூர கொலை; 10 முறை கடித்த பாம்பு - காதல் மோகம்
மனைவி கணவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல் விவகாரம்
உத்தரப்பிரதேசம், மீரட்டில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை பாம்பினை கடிக்க வைத்து கொன்றுள்ளார். இதுதொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில் நபர் ஒருவரின் உடல் கட்டிலில் கிடப்பதையும், விஷப் பாம்பு அவரை பலமுறை கடிப்பதையும் காண முடிகிறது. தொடர்ந்து போலீஸார், விசாரித்ததில் இறந்தவர் மீரட்டைச் சேர்ந்த அமித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கணவன் கொலை
உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அமித் விஷம் ஏறி மரணமடைந்தது தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் அமித்தின் மனைவி ரவிதாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில், தனது காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து அமித்தை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் அமித்தை கொன்றதை மறைக்க, பாம்பை கொண்டு கடிக்க வைப்பது வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.
முன்னதாக, மீரட்டில் மனைவி காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து ட்ரம்மில் கான்கிரீட் போட்டு மூடிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.