ICU-வில் விமானப் பணிப்பெண்ணுக்கு வன்கொடுமை - மிரள வைக்கும் சம்பவம்
ICU-வில் விமானப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ICU-வில் கொடூரம்
ஹரியானா, குருகிராமில் மேதாந்தா என்னும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 46 வயது விமானப் பணிப்பெண் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உடல்நலம் சரியான பிறகு வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது கணவரிடம், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்தபோது, மருத்துவமனை ஊழியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவரிடம் கூறியுள்ளார்.
தீவிர விசாரணை
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் நடைபெறும்போது இரண்டு செவிலியர்களும் அவர்களுடன் இருந்ததாகவும், அவர்களும் அதைத் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தற்போது, மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.