25 ஆண்டு திருமண வாழ்க்கை - கணவர் கேள்வி கேட்கிறார்.. விவாகரத்து கோரும் பெண்!
கேள்விக்கு மேல் கேள்வி கேட்பதாக கணவரிடமிருந்து பெண் ஒருவர் விவாகரத்து கேட்டுள்ளார்.
விவாகரத்து
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பந்தம் என்று கூறுவதுண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து, மனமுறிவு மெல்ல மெல்ல அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. கணவன், மனைவிக்குள் ஏற்படும் மன கசப்புகள்,
சங்கடங்கள் வளந்துகொண்டே சென்று ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை போய் முடிகிறது. அதில் ஒரு சில விவாகரத்து வினோத காரணங்களுக்கு நடக்கிறது. அந்த வகையில், அதிகமான கேள்விகள் கேட்பதை காரணமாக கூறி 25 ஆண்டுகளாக
கேள்வி
உடன் இருந்த கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். வழக்கமாக பயன்படுத்தும் சோப்புக்கு பதில் மற்றொன்றை மாற்றி உபயோகப்படுத்தினால் கூட, "ஏன் மாற்றினாய்? இதை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
இத்தனை சோப்புகள் இருக்கும்போது இதை ஏன் தேர்ந்தெடுத்தாய்?" என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் பதிவினை பார்த்த நெட்டிசன்கள் இடையே பெரும் பேசுபொருளாக இந்த விவாகரத்து விவகாரம் மாறியுள்ளது.