நடத்தையில் சந்தேகம்; 3வது மனைவியை 12 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைத்த கணவன்!
மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுக்குள் கணவனே சிறைவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கணவன் சந்தேகம்
கர்நாடகா, எச்.மாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனலயா. கடந்த 12 வருடங்களுக்கு முன் சுமா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்தே அவர் மீது சந்தேகம் கொண்டுள்ளார்.
இதனால், ஒரு அறையில் சுமாவை வைத்து பூட்டி 3 பூட்டுக்களைப் போட்டுள்ளார். அங்கு அவர் விளக்குகள் எதுவும் இல்லாமல் தவித்து வந்துள்ளார். மேலும், கழிப்பறை இல்லாமல் வாளியை வைத்து மலம், சிறுநீர் கழித்துள்ளார்.
12 ஆண்டுகள் கொடுமை
அதைக் காலையில் சுனலயா எடுத்து வெளியேற்றியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக சுமாவின் நடமாட்டம் இல்லாததால் அவரது உறவினர்கள் அவ்வப்போது விசாரித்துள்ளனர். அதற்கு கணவர் பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், இதனை அறிந்த த வழக்கறிஞர் சித்தப்பாஜி சாந்த்வான் கேந்திரா என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் அந்த வீட்டிற்கு சென்று கதவை உடைத்து சுமாவை மீட்டனர்.
தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுமாவையும், குழந்தைகளையும் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் தப்பியோடிய சுனலயாவை போலீஸார் தேடி வருகின்றனர்.