கல்யாண நாளை மறந்த கணவன் - ஆத்திரத்தில் புரட்டி எடுத்த மனைவியின் குடும்பம்
திருமண நாளை மறந்ததால் பெற்றோரை அழைத்து வந்து கணவனை, மனைவி தாக்கியுள்ளார்.
திருமண நாள்
மும்பையின் காட்கோபரில் வசித்து வரும் தம்பதிகள் விஷால் நங்ரே (32) மற்றும் கல்பனா. விஷால் நங்ரே கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளார். கல்பனா ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் திருமண நாளை விஷால் நங்ரே மறந்துள்ளார்.'

இதனால் மனைவி, கணவனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதோடு நிறுத்தாமல் நாங்ரே தனது வீட்டிற்கு அருகில் தனது வாகனத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, கல்பனா வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, உன்னுடன் வாழ விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மனைவி ஆத்திரம்
அதனைத் தொடர்ந்து, வாக்குவாதம் முற்றிய நிலையில் கல்பனா தனது பெற்றோரையும், சகோதரரையும் அழைத்து வந்து விஷால் நங்ரேவையும், அவரது தாயையும் சரமாரியாக அடித்து, கடித்தும் வைத்துள்ளார்.
அதனையடுத்து இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் மனைவி மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.