10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் வேற லெவலில் கொண்டாடிய அல்லு அர்ஜுன்!

allu arjun tajmahal pride
By Jon Mar 09, 2021 11:36 AM GMT
Report

10ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் பிரமாண்டமாக கொண்டாடிய புகைப்படங்களை இணையதளத்தில் அல்லு அர்ஜுன் வெளியிட்டார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் ஆவார்.

கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கும், ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்நேகா ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். 'ஸ்டார் கப்பிள்' என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர ஜோடிகளாக இருவரும் வலம் வருகிறார்கள். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ரெட்டி இருவரும் தங்களுடைய 10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடி இருக்கிறார்கள்.

இதுதொடர்பான புகைப்படங்களை அல்லு அர்ஜுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் இந்தாண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்த ஆக்ரா காவல் துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தாஜ்மஹாலுக்கு அருகில் நின்ற போது ஒரு இந்தியனாக நான் பெருமை அடைந்துள்ளதாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.