TRUTH OR DARE; நண்பர்கள் முன் ஆடையை அவிழ்க்க வற்புறுத்திய கணவர் - பெண் பரபரப்பு புகார்!
நண்பர்கள் முன் ஆடையை அவிழ்க்க கணவர் வற்புறுத்துவதாக பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
வற்புறுத்திய கணவர்
மும்பையை சேர்ந்த 35 வயதாகும் திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் திரைப்பட VFX கலைஞராக பணியாற்றுவரும் அந்த பெண் சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். அவர் அவ்வப்போது, தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளார்.
பெண் புகார்
அந்த நேரத்தில் TRUTH OR DARE நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளன. இதுவரையிலும் தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இடகுபோன்று தன்னை நண்பர்கள் முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும்,
அடித்து துன்புறுத்தினார் என்று அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.