ஆன்லைன் செயலியில் மனைவியின் அந்தரங்க வீடியோ - கணவரே செய்த கொடுமை
பணம் சம்பாதிக்க மனைவியை ஆன்லைன் செயலியில் நிர்வாணமாக பேசுமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார்.
நிதி நெருக்கடி
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமண்ய ரெட்டி என்பவருக்கு ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே கடனில் இருந்த சுப்ரமண்ய ரெட்டி கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மிகவும் ஏழ்மை நிலைக்கு சென்றுள்ளார்.
மனைவியின் வீடியோ
இந்நிலையில் ஆபாச செயலி ஒன்றில் ஐடி ஒன்றை உருவாக்கி தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியை அதில் நிர்வாணமாக பேச வற்புறுத்தியுள்ளார். வேறு வழியில்லாமல் மனைவியும் அதற்கு ஒப்புக்கொண்டு நிர்வாணமாக பலருடனும் வீடியோவில் பேசியுள்ளார்.
இதன் மூலம் 2 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் சம்பாதித்துள்ளனர். இந்த பணத்தின் மூலம் சுப்ரமண்ய ரெட்டி தன்னுடைய கடனை அடைந்துள்ளார். ஆனாலும் பணத்தாசையால் தனது மனைவியை தொடர்ந்து வீடியோ கால் பேச வற்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அவரது வீடியோ வைரலானதில் பணத்தை பறித்துக்கொண்டு, மனைவியை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இந்த கொடுமை குறித்து மனைவி ஆர்.சி.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை ஏற்கும் முன் அங்குள்ள காவலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார்.