கார் கதவில் தொங்கியபடி காதல் மனைவி - தரதரவென இழுத்துச் சென்ற கணவன்!
மனைவியை தரதரவென காரில் இழுத்து சென்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
கன்னியாகுமரி, அணைக்கரைப் பகுதியை சேர்ந்தவர் அபிஷா. இவர் முதலாறு பகுதியைச் சேர்ந்த பெர்லின் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரது வீட்டிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, வீட்டினரைச் சமாதானம் செய்த அபிஷா 2021ல் பெர்லினை திருமணம் செய்துள்ளார். அப்போது, 50 சவரன் நகை மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ஒரு சொகுசு கார் என அபிஷாவின் தந்தை சீதனம் வழங்கியுள்ளார்.
கணவன் வெறிச்செயல்
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓவியரான பெர்லினுக்கு முழு நேர வேலை இல்லாததால் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். எனவே மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தாங்கமுடியாத அபிஷா, அவரை பிரிந்து சென்று கல்லூரி ஒன்றில், உதவிப் பேராசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அபிஷா பணி முடிந்து மால வீடு திரும்புகையில், அந்த வழியே காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்துத் தாக்கி காரில் இருந்தபடியே இழுத்துச் சென்றுள்ளார். இதில் கூச்சலிட்ட அவரை வேகமாக கீழே தள்ளிவிட்டு பெர்லின் தப்பியுள்ளார். உடனே அபிஷாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அபிஷாவின் தந்தை புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.