பேராசிரியையை தாக்கி ரோட்டில் இழுத்துச்சென்ற கொடூர கொள்ளையன் - வைரலாகும் புகைப்படம்

Viral Photos Crime
By Irumporai Mar 17, 2023 03:28 AM GMT
Report

கல்லூரி பேராசிரியரை தாக்கி ரோட்டில் தரதர வென்று இழுத்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பேராசிரியர் மீது தாக்குதல்

திருச்சி வ.உ.சி. சாலை கேலக்சி டவர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 53). பேராசிரியையான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.சி. துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மாலை நேரத்தில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி செல்வாா். பின்னர் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.  

பேராசிரியையை தாக்கி ரோட்டில் இழுத்துச்சென்ற கொடூர கொள்ளையன் - வைரலாகும் புகைப்படம் | Professor Attacked Dragged Her To The Road

தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்

அதுபோல் கடந்த 12-ந்தேதி மாலை அவர் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை எடுக்க சென்றார். அப்போது, அங்கு நின்ற ஒரு வாலிபர் தான் வைத்திருந்த மரக்கட்டையால் பேராசிரியையின் தலையில் தாக்கினார். இதில் நிலைகுலைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே, அந்த வாலிபர் பேராசிரியையின் கால்களை பிடித்து தர, தரவென ரோட்டில் இழுத்துச்சென்று அருகில் இருந்த சுவரில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு ஸ்கூட்டர் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றான்.

மயக்கம் தெளிந்து எழுந்த பேராசிரியை சீதாலட்சுமி, இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பேராசிரியையை தாக்கி ஸ்கூட்டர், செல்போனை பறித்துச்சென்றவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமனேரியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது.  

மடக்கி பிடித்த போலிசார்

இதைத்தொடர்ந்து, தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், செந்தில்குமார் தாராநல்லூர் பகுதியில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று செந்தில்குமாரை பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும், பேராசிரியையிடம் கொள்ளையடித்த ஸ்கூட்டரில் அதிவேகமாக சென்றார். அ

ப்போது, சாலையின் மையத்தடுப்பில் மோதி ஸ்கூட்டருடன் அவர் கீழே விழுந்தார். இதில் அவருடைய இடதுகால் உடைந்தது. இதைத்தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செந்தில்குமாரிடம் இருந்து சீதாலட்சுமியின் ஸ்கூட்டர், செல்போனை போலீசார் மீட்டனர். 

தற்போது பேராசிரியை தாக்கி இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது