கதறிய கணவனும், குழந்தைகளும் - பிடிவாதமாக காதலனுடன் சென்ற தாய்!
பெண் ஒருவர் குழந்தைகளையும், கணவனையும் விட்டு விட்டு காதலனுடன் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
சேலம், செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுண்டப்பன். வீட்டிலேயே பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தையும், 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் தனபால் பட்டு நெசவு கூலி வேலை செய்து வந்திருக்கிறார்.
அவருக்கும் திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரும், லட்சுமியும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இதில் ஏற்பட்ட பழக்கத்தில் ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும் நிரந்தரமாக ஒன்றாய் வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கதறிய குழந்தைகள்
இதனையடுத்து லட்சிமியின் கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், புதுச்சேரியில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. அப்போது லட்சிமியை அழைத்து வந்து விசாரித்துள்ளனர். அதில், அவரது குழந்தைகளும், கணவனும் தங்களுடன் வீட்டுக்கு வருமாறு கதறி அழுது இருக்கிறார்கள்.
ஆனால், அந்தப் பெண் கணவனும் வேண்டாம் என்று தனபால் உடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக சொல்லி இருக்கிறார். ஆனால் போலீசார் காதலனுடன் அனுப்ப மறுத்து லட்சுமியை தாயுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
மறுபுறம் தனபாலின் மனைவி தனது கணவனிடம் தங்களுடன் வருமாறு சண்டையிட்டுள்ளார்.இதை அடுத்து போலீசார் தனபாலை மனைவி குழந்தைகளுடன் அனுப்பி வைத்துள்ளனர்.