காதலனுடன் பிரேக் அப் மனமுடைந்த இளம்பெண் - முதியவரை காதலித்து மணந்தார்
காதலுக்கு சாதி, மதம், இனம், நாடுகள் போன்ற எல்லைகள் இல்லை என்பது போலவே வயதும் ஒரு தடை இல்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் நிருபித்துள்ளார். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் அமேண்டா கெனான்.
முதியவருடன் காதல்
இவருக்கும் இவரது கல்லூரி நண்பருக்கும் காதல் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்று நின்றுவிட்டது. தனது காதல் தோல்வியால் மனம் உடைந்த நிலையில் இருந்த அமேண்டா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தனது தந்தையின் வயதை ஒத்த டேவிட் ஏஸ் என்பவரை சந்தித்துள்ளார்.
டேவிட் ஏஸ்சுக்கு தற்போது வயது 54. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு மனைவியை பிரிந்துள்ளார். விவாகரத்துக்குப் பின் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்ற சபதத்துடன் டேவிட் வாழ்ந்து வந்துள்ளார்.
இணைந்த இதயங்கள்
இந்த சூழலில் தான் டேவிட் ஏஸ், அமேண்டா சந்திப்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நட்பு, டேட்டிங் காதல் என்று வளர, கடந்தாண்டு இருவரும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம் என முடிவெடுத்தனர்.
டேவிட் ஏஸ்சுக்கு முதல் திருமணத்தின் மூலம் 21 வயதில் மகனும், 20 வயதில் உள்ளனர். அமேண்டாவின் அழகில் மயங்கிய தனது சபதத்தை மீறி இரண்டாவது திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தாக டேவிட் ஏஸ் தெரிவித்துள்ளார்