காருக்குள் கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன் - தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த சோகம்!
கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கணவர் தாக்க்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு பெண்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் கைநிறைய சம்பளத்துடன் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் கணவர் வேறொரு பெண்ணை தனது காரில் அமரவைத்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து மனைவிக்கு தகவல் கிடைத்ததும், பதறிப்போன அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
போலீசார் விசாரணை
பின்னர் அதே இடத்தில் வைத்து தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கு இடையில் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் உள்ளவர்களும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதனால் அவமானத்தில் கோபமடைந்த கணவர் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.