மொட்டை மாடியில் இளைஞருடன் தனிமையில் மனைவி - புரட்டி எடுத்த மாமியார், கணவன்!
மனைவியின் கள்ளக்காதலனை கணவர் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
உத்தரப்பிரதேசம், அம்ரோஹாவைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவருடன் தவறான உறவு இருந்துள்ளது.
சம்பவத்தன்று, அந்த இளைஞன், பெண்ணை அவரது வீட்டு மொட்டைமாடியில் சந்தித்துள்ளார். அப்போது திடீரென பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தினரும் மொட்டை மாடியில் இவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
சிக்கிய இளைஞர்
தொடர்ந்து அந்த இளைஞரை அடித்தும் உதைத்தும் கணவர் மற்றும் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், வலி தாங்கமுடியாத இளைஞர் "இனிமேல் இங்கே வரவே மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க" என்று கெஞ்சுகிறார். இந்த வீடியோ வைரலாகியதையடுத்து, போலீசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.