7 அடி பள்ளத்தில் யோகா ஆசிரியரை உயிருடன் புதைத்த கணவன்! என்ன காரணம்?
இந்தியாவில் யோகா ஆசிரியர் ஒருவரை கணவன், 7 அடி பள்ளத்தில் உயிருடன் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்காதல்
ஹரியானா, ரோதக் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப். திருமணமான இவர் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்த நிலையில் அதில் ஜக்தீப் என்ற யோகா ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
தொடர்ந்து, ஜக்தீப் அடிக்கடி ஹர்தீப்பின் மனைவியோடு பேசி வந்த நிலையில், அது நாளடைவில் தகாத பழக்கமாக மாறியுள்ளது.
கணவன் வெறிச்செயல்
இதுகுறித்து அறிந்த ஹர்தீப் ஜக்தீப்பை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும், தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து திட்டம் போட்ட ஹர்தீப், யோகா ஆசிரியரை கடத்திச் சென்று தனது வீட்டின் அருகே வெட்டப்பட்டிருந்த 7 அடி ஆழ குழியில் போட்டு உயிருடன் புதைத்துள்ளார்.
இதனையடுத்து ஜக்தீபை காணவில்லை என அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்ததை ஹர்தீப் ஒத்துக் கொண்டுள்ளார்.
உடனே, ஹர்தீப் மற்றும் அவரது நண்பன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.