மனைவிக்கு 55 ஆயிரம் ஜீவனாம்சத்தை சில்லறையாக கொடுத்த கணவன் - கடுப்பேற்ற சதி!
மனைவிக்கு 55 ஆயிரம் ஜீவனாம்சத்தை கணவன் சில்லறையாக வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வரதட்சணை கொடுமை
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் தஷ்ரத் - சீமா தம்பதி. திருமணமாகி 2 வருடங்களில் வரதட்சணை கொடுமை காரணமாக தஷ்ரத்தை விட்டு சீமா பிரிந்து வாழ்கிறார். மேலும், அதுகுறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், மனைவிக்கு இடைக்கால பராமரிப்பு நிதியாக ரூ.2.25 லட்சம் வழங்க கணவன் தஷ்ரத்துக்கு உத்தரவானது. ஆனால் அதனை தராமல் காலம் தாழ்த்தியதால் தஷ்ரத்தை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் அதிரடி
இதனால், முதல்கட்டமாக ரூ.55 ஆயிரத்தை வழங்குவதாக தெரிவித்தனர். அதனை 7 பெரிய பெட்டிகளில் சுமார் 300 கிலோவுக்கான சில்லறைகளை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
இதற்கு சீமா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, நாணய குவியலை ரகம் பிரித்து, எண்ணி ரூ1000 தொகுப்புகளாக நீதிமன்றத்தில் சமர்பிக்கும் பொறுப்பை சிறைவாசத்திலிருக்கும் தஷ்ரத்துக்கு வழங்கி நீதிபதி உத்தரவிட்டதோடு, அதற்கு ஒரு வாரம் அவகாசம் தந்துள்ளார்.