பிகினியில் குளிக்க ஆசை..மனைவிக்காக தனித்தீவையே வாங்கிய கணவர் - எவ்வளவு தெரியுமா?
மனைவி நீச்சல் உடையில் குளிக்க கணவர் தீவையே விலைக்கு வாங்கியுள்ளார்.
மனைவிக்காக..
துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதி அல்நடக் (வயது 26). இங்கிலாந்தை சேர்ந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார்.
பிறகு இருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மனைவி மீது அதீத அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவ்வப்போது அவருக்கு ஏராளமான பரிசு வழங்குவது உண்டு.
இந்த நிலையில், தனது மனைவி நீச்சல் உடையில் குளிக்க ஆசைப்பட்டார் என்ற காரணத்திற்காக ஜமால் அல்நடக் அவருக்கு ஒரு தீவையே வாங்கி பரிசளித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி அல்நடக் அந்த தனியார் தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ சுமார் 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இருப்பிடத்தை வெளியிட சவுதிஅல்நடக் மறுத்து விட்டடார்.
ஆனால் தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 418 கோடி செலவிட்டதாக கூறியுள்ளார்.
தனித்தீவு
ஏற்கனவே சவுதிஅல்நடக் தனது ஆடம்பர வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தவர் ஆவார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளன்று அவரது கணவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததாக
சவுதிஅல்நடக் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்த நிலையில், சவுதி அல்நடக் ஷாப்பிங் செய்வதற்காக ரூ.12 லட்சம் செலவழித்தாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும் ஹெர்ம்ஸ் பிராண்ட்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் அங்கே ரூ.29 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அழகு சிகிச்சைகளுக்காக செலவழித்த பணம் உள்பட ஒரே நாளில் தனக்காக ரூ.60 லட்சம் வரை செலவழித்ததாக கூறி பதிவிட்ட வீடியோ வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.
அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து சவுதி அல்நடக் வெளியிட்ட வீடியோவில், இதுதொடர்பாக கூறுகையில், எனது வாழ்க்கை முறையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு வருகிறது என்று எனக்கு புரியவில்லை என கூறியுள்ளார்.