கணவன், குழந்தையைக் கொன்று புதைத்த மனைவி - இரட்டை ஆயுள் தண்டனை!
கணவன் மற்றும் குழந்தையைக் கொன்று புதைத்த இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தகாத உறவு
ராணிப்பேட்டை, தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் எலெக்ட்ரீசியன் ராஜா. அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா என்ற இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு வயதில் பிரனீஷ் என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில், கணவரின் நண்பர் ஒருவருக்கும், தீபிகாவுக்கும் இடையே தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மனைவி வெறிச்செயல்
எனவே, இடையூறாக இருந்த கணவனையும், குழந்தையையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் ராஜாவின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார். பின், தனது குழந்தையையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து இரு உடல்களையும் ஏரிக்கரை அருகே குழிதோண்டிப் புதைத்துள்ளார். இதற்கு கணவரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மூன்றாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கணவரின் நண்பர் விடுவிக்கப்பட்டுள்ளார்.