மனைவியை குடும்பம் நடத்த அனுப்பல.. மாமியாரிடம், மருமகன் வெறிச்செயல்!
மருமகன், மாமியாரை கட்டையால் தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
குடும்ப விவகாரம்
சென்னை நுகர் பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றி வருபவர் சுமன்ராஜ். இவர் கடலூரை சேர்ந்த வினோதினியை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து, கணவர் சுமன் ராஜ், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்புமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தாக்கிய மருமகன்
அப்போது வினோதினியை அனுப்ப முடியாது என அவரது மாமியார் வாசுகி மற்றும் மைத்துனர் வெங்கடேசன் கூறியதால், ஆத்திரமடைந்த அவர், கட்டையை கொண்டு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
உடனே இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.