மூன்றும் பெண் குழந்தைகள், மனைவியின் விரல்களை வெட்டி டார்ச்சர் செய்த கணவன் - அதிர்ச்சி!
ஆந்திராவில் ஒருவர் தனக்கு 3 குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால் மனநிவியை டார்ச்சர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டார்ச்சர் செய்த கணவன்
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சபிஹா என்ற மனைவி உள்ளார், இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களுக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று இவரது மனைவியை சித்திரவதை செய்துள்ளார், இவர்மட்டுமின்றி இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் இவரை டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் இவரது மனைவி பல முறை இவரது பெற்றோரிடம் கூறியுள்ளார், அவர்களும் 3 முறை போலீசில் புகாரளித்தனர். பிறகு, இவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கைது
இந்நிலையில், சந்த் பாஷாவின் மனைவிக்கு ஆண் வாரிசு இல்லையென்று இவர் வேறு திருமணம் செய்வதாக இருந்தார். சபிஹாவை மொட்டை மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று கைவிரல்களை உடைத்தனர். பின்னர் அந்த அறையிலேயே அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்தனர், அதில் அவர் வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி உயிர் பிழைத்து வந்தார்.
சிறிது நாட்களாக சபிஹா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீசிடம் புகாரளிதானர், வழக்கு பதிவு செய்த போலீசார் கழிவறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை மீட்டனர். மேலும், இவரை டார்ச்சர் செய்த குடும்பத்தினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.