ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்
வேலுார் மாவட்டம் காட்பாடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி கடைக்கு வருகின்றனர். இதனை கட்டுக்குள் கொண்டுவர ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதனையடுத்து இன்று வேலூர் மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.இளங்கோவன் தலைமையிலான காவலர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் ஆந்திராவில் தமிழகம் நோக்கி வரும் பேருந்துகளிலும் சோதனை மேற்கொண்டனர் அப்போது பேருந்து ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது சித்தூரை சேர்ந்த கஜபதி (வயது 50) என்பவர் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 60 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர் இதனையடுத்து கைது செய்யப்பட்ட கஜபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.