காதலித்து கல்யாணம் செய்த மகன் - ஆதங்கத்தால் விஷம் குடித்து உயிரை விட்ட கணவன் - மனைவி!
மகன் காதல் திருமணம் செய்ததால், பெற்றோர் தற்கொலை செய்துள்ளனர்.
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி, பெருகோனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(50). இவரது மனைவி கீதா(45). இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் ரஞ்சித்குமார் (27),
அதேப் பகுதியைச் சேர்ந்த தீபிகா (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெற்றோர் தற்கொலை
ஆனால் அதனை கண்டுக்கொள்ளாமல் இருவரும் பழகி வந்துள்ளனர். தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணமும் செய்துக் கொண்டனர். இதனை அறிந்த பெற்றோர் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்ததில் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.