மணமேடையிலேயே ஸ்டார்ட் ஆன தம்பதியின் அடிதடி... வைரலாகும் வீடியோ!

Viral Video Marriage Nepal
By Sumathi 1 மாதம் முன்

நேபாளத்தில் மணமேடையில் வைத்து புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண சடங்கு 

நேபாளத்தில் நடந்த திருமண சடங்கு குறித்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் தங்கள் திருமண விழாவில் மேடையில் அனைவர் முன்னிலையிலும் கட்டி புரண்டு சண்டையிட்டது தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

மணமேடையிலேயே ஸ்டார்ட் ஆன தம்பதியின் அடிதடி... வைரலாகும் வீடியோ! | Husband And Wife Fighting On The Wedding Table

பாரம்பரிய திருமண உடையில் மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்திருப்பதுடன் வீடியோ தொடங்கு கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணவளிக்கும் சடங்கைத் தொடங்கியவுடன்,

தம்பதிகள் அடிதடி 

அவர்கள் உடல் ரீதியாக ஒருவரையொருவர் தள்ளுவதும் இழுப்பதும் நடந்தது. தொடரந்து ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர். அதில் உறவினர்கள் அவர்களை தடுக்க முயற்சித்தும் அவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிகொண்டனர்.

மணமேடையிலேயே ஸ்டார்ட் ஆன தம்பதியின் அடிதடி... வைரலாகும் வீடியோ! | Husband And Wife Fighting On The Wedding Table

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ 70,000க்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. பார்வையாளர்களிடமிருந்து கலவையான கருத்துக்களை பெற்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு சில கருத்து வேறுபாடுகளால் கணவன் மனைவிக்குள் சண்டைகள் நடப்பது இயல்பு

ஆனால் திருமண மேடையிலே கணவன் மனைவி சண்டையிட்டது பலரையும் கவலையடைய செய்துளளது.