கர்ப்பிணி மனைவியுடன் ஒரே சேலையில் தூக்கிட்டு பலியான கணவன்.. நடந்தது என்ன?

Crime Death
By Sumathi Aug 15, 2022 07:03 AM GMT
Report

காதல் திருமணம் செய்த கணவன் மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா(22). இவர் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கர்ப்பிணி மனைவியுடன் ஒரே சேலையில் தூக்கிட்டு பலியான கணவன்.. நடந்தது என்ன? | Husband And Wife Commit Suicide By Hanging

அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). ஆர்.கே. பேட்டை அருகே கொண்டாபுரம் காலனியை சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஒரே சேலையில்...

இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

கர்ப்பிணி மனைவியுடன் ஒரே சேலையில் தூக்கிட்டு பலியான கணவன்.. நடந்தது என்ன? | Husband And Wife Commit Suicide By Hanging

நேற்று காலை கொண்டாபுரம் காலனியில் உள்ள சவுந்தரராஜன் வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அதிர்ச்சி சம்பவம்

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.கே.பேட்டை போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.