திருமணமான 3வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - பொதுமக்கள் அதிர்ச்சி

chennai avadiyoungwomansuicide youngwomansuicide
By Petchi Avudaiappan Apr 08, 2022 09:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னை அருகே திருமணமான 3வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி கோவர்த்தனகிரி அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்த உதயா  என்ற எம்.பி.ஏ. பட்டதாரி பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் பூந்தமல்லி குமரன் நகரில் வசித்து வந்த அனிதா  என்பவர் வேவை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே அனிதாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்துக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். இதனால் உதயா மற்றும் அனிதா கடந்த 6 ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பின்  ஆவடியில் உள்ள உதயாவின் வீட்டில் மேல் தளத்தில் உள்ள குடிசை வீட்டில் இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து அனிதாவின் பெற்றோர் அவரை தங்களது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு உதயாவின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அனிதா குடிசை வீட்டுக் கூரையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆவடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

திருமணமாகி 3 நாட்கள் மட்டுமே ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.