அனைவரின் கவனத்தை ஈர்த்த ஐ.ஏ.எஸ் தம்பதி - அண்டை மாவட்டங்களில் நியமனம்!
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டதில் அடுத்தடுத்த மாநிலங்களில் ஐ.ஏ.எஸ் கணவன் மனைவி இருவரும் நியமிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆட்சியர்
மாற்றம் தமிழ்நாட்டில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்குமுன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்பொழுது ஒரே நாளில் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி மாற்றப்பட்டதில் அடுத்தடுத்த மாவட்டங்களில் கணவன் மற்றும் மனைவியை நியமிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஐ.ஏ.எஸ் தம்பதி
இதனை தொடர்ந்து, அந்த மாவட்ட ஆட்சியர்கள் இருவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

அதில் மனைவி ஆஷா அஜித், இதற்கு முன் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக இருந்தார்.
இவரது கணவர் விஷ்ணு சந்திரன் முன்னர் நாகர்கோவில் துணை ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். பரமக்குடியில் வருவாய் கோட்டாட்சியராகவும் இருந்துள்ளார்.
தற்பொழுது, சிவகங்கை மாவட்டத்திற்கு ஆஷா அஜித் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விஷ்ணு சந்திரன் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அடுத்தடுத்து உள்ள மாவட்டங்களில் கணவன், மனைவி இருவரும் ஆட்சியர்களாகப் பொறுப்பேற்றுள்ளதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan