திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
TN Weather
By Thahir
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இன்று பள்ளிகளை மாலை 3மணிக்குள் முடித்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.