வெறும் ரூ.99 ஆஃபரால் வந்த வினை - திருமணத்தை கொண்டாட போன ஜோடி தீயில் கருகிய கொடுமை!

Gujarat Fire Death
By Sumathi May 27, 2024 07:31 AM GMT
Report

திருமணத்தை கொண்டாட சென்ற பெண் கணவருடன் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

திடீர் தீ விபத்து

குஜராத், ராஜ்கோட்டில் இரண்டு நாள்களுக்கு முன்பு விளையாட்டு மையத்தில் திடீரென தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்‌ஷய் - கியாதி

அவர்களில் பெரும்பாலானோர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால், டி.என்.ஏ.பரிசோதனை நடத்தி உடலை கண்டறியும் நிலை உருவாகியுள்ளது.

தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட டி.ஆர்.பி.கேம் சோன் பங்குதாரர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் யுவராஜ் சிங் என்பவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 15 பேர் ஆண்கள். 6 பேர் பெண்கள். 3 குழந்தைகள்.

திடீரென தீ பற்றி எரிந்த ஹாலிவுட் பிரபல Warner Bros ஸ்டூடியோ - பரபரப்பு!

திடீரென தீ பற்றி எரிந்த ஹாலிவுட் பிரபல Warner Bros ஸ்டூடியோ - பரபரப்பு!

புதுமணத் தம்பதி பலி

இதில், அக்‌ஷய் மற்றும் அவரது மனைவி கியாதி மற்றும் மனைவியின் தங்கை ஹரிதா ஆகியோர் அடங்குவர். அக்‌ஷயிக்கும் கியாதிக்கும் அண்மையில் தான் நீதிமன்ற உத்தரவு மூலம் திருமணம் நடந்துள்ளது. அக்‌ஷய் கனடாவை சேர்ந்தவர். இதனால், ஆண்டு இறுதியில் பெரிய அளவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளனர்.

வெறும் ரூ.99 ஆஃபரால் வந்த வினை - திருமணத்தை கொண்டாட போன ஜோடி தீயில் கருகிய கொடுமை! | Husband And Sister Got Burnt In The Gujarat Fire

இதற்கிடையில், திருமணத்தை கொண்டாட விளையாட்டு மையத்திற்கு சென்ற போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாள் தினத்தில் விளையாட்டு மைய நிர்வாகம் திடீரென கட்டணத்தை ரூ.99 ஆக குறைத்து ஆஃபர் உத்தரவிட்டது.

இதனால் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்தது. அதோடு வெளியில் வர குறுகலான ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், அருகில் வெல்டிங் நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து வந்த தீக்கனல் விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், முதல்வர் புபேந்திர பட்டேல் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.