நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி, கணவர் பலி!
காரில் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணியும், அவரின் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் தீ விபத்து
கேரளா, குற்றியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரெஜித் (32). இவரின் மனைவி ரிஷா (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

ரிஷாவை முன் சீட்டில் அமர வைத்து, பிரெஜித் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். பின் சீட்டில் ஒரு குழந்தை உள்பட நான்குபேர் அமர்ந்திருக்கின்றனர். மருத்துவமனைக்குச் செல்ல சிறிது தொலைவே இருந்த சமயத்தில் காரின் முன் பகுதியில் நெருப்பு பற்றி எரிந்துள்ளது.
கர்ப்பிணி பலி
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் பின்பக்க கதவை திறந்து சீட்டிலிருந்த குழந்தை உள்பட நான்குபேரை மீட்டனர். முன்பக்க கதவை திறக்கிற்பட்டபோது, திறக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.
காருக்குள்ளேயே கணவனும், கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கார் ஸ்டீயரிங் பகுதிக்கு அருகே எக்ஸ்ட்ரா பிட்டிங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.