வேலைக்கார பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவன் - ICUவில் மனைவி செய்த செயல்!
கணவரை காப்பாற்ற மனைவி முன்வராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
சீனா, வடகிழக்கே லையானிங் மாகாணத்தைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தலையில் ஏற்பட்ட ரத்தகசிவால் மருத்துவமனையால் சேர்க்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை மோசமான நிலையில், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருடைய மனைவியை தொடர்புக்கொள்ள முயன்றதில் அவர் வேலையாக வெளியே சென்றிருந்ததால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்போது அவரது முதல் மனைவி விரைந்து வந்து தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
ஆனால், இவரை விட்டு விட்டு வேலைக்கார பெண்ணுடன் இந்த நபர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்படவே, அவரை அந்த பெண் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். தற்போது அந்த மனைவி மருத்துவரிடம் பேசுகையில், என்னுடைய கணவர் 10 ஆண்டுகளாகவே எனக்கு உண்மையற்றவராக இருக்கிறார் என எனக்கு நன்றாக தெரியும்.
மனைவி செய்த செயல்
என் மீது அவருக்கு எந்த அன்பும் இல்லை. எந்தவித பண உதவியும் செய்யவில்லை. சில காலங்களாக, அவர் மீது தனக்கும் அன்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிகிச்சை ஒப்புதலுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட மறுத்து சுவாச குழாய் வழியே அளித்து வரும் சிகிச்சையை நீக்கி விடும்படியும் கூறியுள்ளார்.
அவரை காப்பாற்றுவதற்கான எந்தவித முயற்சியையும் கைவிடும்படி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.