மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது உண்மையா? விஞ்ஞானிகள் சொல்வதென்ன!

World
By Sumathi Nov 15, 2025 09:16 AM GMT
Report

மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது தொடர்பான தகவல்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஏழாவது அறிவு 

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனிதர்களுக்கு "தொலையுணர்வுத் தொடுகை" என்ற மறைக்கப்பட்ட ஏழாவது அறிவும் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

human seventh sense

இந்த உணர்வு ஒரு பொருளை உடலால் தொடாமலேயே அதன் இருப்பை உணரும் திறன். மணற்பரப்பில் மறைந்திருக்கும் இரையை கண்டறியும் கடற்பறவைகளை போலவே,

2026-ல் கோடீஸ்வரராகும் 5 ராசிகள் - பாபா வாங்கா கணிப்பு!

2026-ல் கோடீஸ்வரராகும் 5 ராசிகள் - பாபா வாங்கா கணிப்பு!

ஆய்வு தகவல் 

மனிதர்களும் மணலில் விரல்களை நகர்த்தும்போது உருவாகும் அழுத்த அலைகளை கண்டறிவதன் மூலம், புதைக்கப்பட்ட பொருளை உணர முடிகிறது.

மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது உண்மையா? விஞ்ஞானிகள் சொல்வதென்ன! | Human S Hidden Seventh Sense Remote Touch Identify

இந்த ஆய்வில், மனிதர்கள் மணலுக்குள் 2.7 செ.மீ ஆழத்தில் உள்ள பொருட்களை 70.7% துல்லியத்துடன் கண்டறிய முடிந்தது.

இது ரோபோக்களின் 40% துல்லியத்தை விட அதிகம். தொல்லியல் ஆய்வு, அபாயங்களை கண்டறிதல் மற்றும் விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் இந்த ஏழாவது அறிவு உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.