150 வயசு வரை வாழலாம்..ஆயுளை நீட்டிக்கும் சீன மாத்திரை!
மனித ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று ஆச்சர்ய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித ஆயுள்
சீனா, ஷென்சென் நகரைச் சேர்ந்த லோன்வி பயோசயன்சஸ் (Lonvi Biosciences) என்ற நிறுவனம், திராட்சை விதை சத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மாத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தக் காப்ஸ்யூல் மாத்திரை மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மருந்துப் பொருளை அளிக்கப்பட்ட ஆய்வக எலிகள், ஒட்டுமொத்தமாக 9.4% அதிக காலம் வாழ்ந்தன. சிகிச்சை தொடங்கிய முதல் நாளிலிருந்து கணக்கிட்டால், அவை 64.2% அதிக காலம் வாழ்ந்ததா தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா அசத்தல்
இந்தச் சேர்மம் “ஸோம்பி செல்கள்” (Zombie Cells) எனப்படும் வயதான செல்களை அழிக்கிறது. இந்த மாத்திரை ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முறையான மருத்துவ சிகிச்சையுடன் இந்தக் காப்ஸ்யூல்களை எடுத்துக் கொண்டால்,

மக்கள் 100 வயதுக்கு மேலும், ஒருவேளை 120 வயது வரையிலும் வாழ முடியும் என்று நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சீன அரசு, செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரித் தொழில்நுட்பத்துடன் சேர்த்து, ஆயுள் நீட்டிப்பு ஆராய்ச்சியைத் தேசிய முன்னுரிமையாக அறிவித்துள்ளது.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan