தவிக்கும் ஐடி நிறுவனங்கள் - முற்றும் தண்ணீர் தட்டுப்பாடு - பள்ளிகளை மூடும் அரசு..?
தண்ணீர் தட்டுப்பாடு நாட்டின் பல பகுதிகளில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது.
பெங்களூரு
குறிப்பாக, இந்தியாவின் மென்பொருள் தலைநகரம் என அழைக்கப்படும் கர்நாடகாவின் பெங்களூரு கோடை காலம் வருவதற்கு முன்பே தவிக்க துவங்கிவிட்டது.
ஒவ்வொரு முறை தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை விவகாரம் எழும் போதெல்லாம், மக்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றி கொள்ள அவ்வப்போது திட்டமிட்டு வருகிறார்கள்.
அதே போல, சமீபத்திய கணக்கீடுகளின் படி, புதிதாக குடிமக்கள் அந்நகரில் குடிபெயர விரும்புவதில்லை என்றும் கூறப்பட்டு வருகின்றது. தற்போது உருவாகியுள்ள தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையால் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனங்கள், SME நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
பள்ளிகள் மூட..
பொதுமக்களுக்கே தண்ணீர் கிடைக்காத நிலையில், பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் தினமும் சுமார் 1 லட்சம் தண்ணீர் தேவை நோக்கி பயணிக்கும், அம்மாநில அரசு பெரும் சிக்கலை எதிர்கொள்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் டேங்கர் லாரிகள் அதிகளவில் தென்படுகின்றன.
வழக்கமான நாட்களில் தண்ணீர் டேங்கர் கட்டணம் ரூ.700 முதல் ரூ.800 வரை இருந்ததை தாண்டி தற்போது சுமார் ரூ.1500 ரூபாய்க்கும் அதிகமாக கேட்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரில் உள்ள தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூட அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்களும் வெளிவருகின்றன.