வேலைக்கு விண்ணப்பித்த அனைவரையும் மறு நொடியே நிராகரித்த HR குழு - என்ன காரணம்?

World
By Karthikraja Oct 01, 2024 02:39 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் மறு நொடியே நிராகரித்த HR குழுவை நிர்வாகம் பணியை விட்டு நீக்கியுள்ளது.

வேலைக்கு போட்டி

இன்றைய கால கட்டத்தில் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு வேலை பெறுவதற்கு கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு காலிப்பணியிடத்திற்கு 200க்கு மேற்பட்டோர் நேர்காணல் வரும் அளவுக்கு போட்டி நிறைந்த சமூகமாக மாறியுள்ளது. 

hr team auto reject cv

இருந்தாலும் தாங்கள் சுயவிவரத்தை(CV) சிறந்த முறையில் தயாரித்து, வேலைக்கு விண்ணப்பிக்கும் பலரும், நேர்காணலுக்கே அழைப்பு வரவில்லை என புலம்புவதை காண முடிகிறது. 

நடப்பது மட்டுமே வேலை; ஒரு நாளுக்கு ரூ28,000 சம்பளம் வழங்கும் டெஸ்லா - ஏன் தெரியுமா?

நடப்பது மட்டுமே வேலை; ஒரு நாளுக்கு ரூ28,000 சம்பளம் வழங்கும் டெஸ்லா - ஏன் தெரியுமா?

மனிதவள மேம்பாட்டு துறை

இப்படியான சூழலில், ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டிய மனித வள மேம்பாட்டு துறையில்(HR Department) வேலை பார்த்த அனைவரையும் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கான காரணத்தை காண்போம்.

அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் குழு தலைவர் reddit தளத்தில் இது தொடர்பாக பதிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில், angular one பதவிக்கு ஆள் எடுத்து மனிதவள மேம்பாட்டு துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

hr team auto reject cv

ஆனால் 3 மாதமாகியும் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பிய போது, விண்ணப்பித்த ஒருவர் கூட முதல் தேர்விலே தேர்ச்சி பெறவில்லை என மழுப்பலாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த குழு தலைவர், தனது சுயவிவரத்தில் சிறுது மாற்றம் செய்து, பெயரை மாற்றி விட்டு புதிதாக ஒரு ஈமெயில் கணக்கு தொடங்கி தனது நிறுவனத்திலே வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

பணி நீக்கம்

விண்ணப்பித்த மறு நொடியே நிராகரிக்கப்பட்டதாக பதிலளித்து ஈமெயில் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது விசயத்தை நிறுவனத்தின் மேலாளர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அவரும் இது போல் வேலைக்கு விண்ணப்பித்த போது மறு நொடியே நிராகரிக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து மனித வள மேம்பாட்டு துறையினரிடம் நடத்திய விசாரணையில், சுய விவரத்தில் angular js என்ற வார்த்தை இல்லாமல் விண்ணப்பிக்கும் அனைவரும் தானாகவே நிராகரிக்கப்படுவது போல், செய்துள்ளனர். angular one க்கு ஆள் தேவைப்படும் நிலையில் angular js வேலைக்கு இவர்கள் ஆட்களை தேடி சாத்தியமான அனைவரையும் இழந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த நிர்வாகம், மனிதவள மேம்பாட்டு துறையில் வேலை பார்த்த ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது.