மெரினா விமான சாகசம் - என்ன நிகழ்ச்சிகள்? நேரில் செல்லாதவர்கள் பார்ப்பது எப்படி?

Udhayanidhi Stalin M K Stalin Indian Air Force Day Tamil nadu Chennai
By Karthikraja Oct 06, 2024 06:07 AM GMT
Report

 மெரினாவில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை நேரில் வர முடியாதவர்களும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய வான்படை செய்துள்ளது.

மெரினா விமான சாகசம்

92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வான்படையின் சாகச நிகழ்வு நடைபெற உள்ளது. 

marina air show

இந்த சாகச நிகழ்வை நேரில் காண லட்சக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையில் குவிந்து வருகின்றனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வு - கலந்து கொள்வது எப்படி?

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வு - கலந்து கொள்வது எப்படி?

விமானங்கள்

சென்னை மெரினாவில் நடக்கும் வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானப்படை குழுவினர்.

1. ஆகாஷ் கங்கா குழு (Akash Ganga Team) இந்தியாவின் முதன்மை ராணுவ பாராசூட் காட்சிக் குழு. 200 கிமீ வேகத்தில் இருந்து பாராசூட் மூலமாக நிலப் பகுதியை அடையும் நிகழ்வு.

2. சூர்ய கிரண் விமானக் குழு (Surya Kiran Aerobatic Team - SKAT) இந்திய விமானப்படையின் சாகச காட்சிக் குழு. ஹாக் Mk 132 விமானத்தை கொண்டு சாகசத்தை நிகழ்த்துகிறது. சிறந்த வானியல் சாகசங்களின் அடையாளமாக விளங்குகிறது. 

chennai marina air show

3. சராங் குழு (Sarang Helicopter Display Team) 2003-ல் உருவாக்கப்பட்ட சாரங் குழு உலகிலேயே ஒரே இராணுவ சாகச ஹெலிகாப்டர் குழுவாக வளம் வருகிறது. ஹால்த் த்ருவ் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரமாண்ட சாகச நிகழ்வை நிகழ்த்த உள்ளனர்.

4. LCH (Light Combat Helicopter) பல குறிக்கோள்களுக்காக உருவாக்கப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப் படும் ஹெலிகாப்டர். ஒரு பைலட் மற்றும் ஒரு கோ பைலட் இயக்குவார்கள்.

5. சேதக் (Chetak) இலகு ரக பயன்பாட்டு ஹெலிகாப்டர். பிரான்சிய விமான நிறுவனமான சுட் ஏவியேஷனின் தயாரிப்பு இது.

தேஜஸ்

6. தேஜஸ் (Tejas) இந்தியாவின் 4.5 தலைமுறை டெல்டா விங், சிறிய மற்றும் மிக எளிய ரக போர் விமானம். தேஜஸ் விமானம் எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

7. HTT-40 இந்துஸ்தான் ஈரோனாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து உருவாக்கியது. இந்திய விமானப்படை எதிர்காலத்தின் திறனுக்கு சான்று. வீரர்களுக்கு மேம்பட்ட பயிற்சியை வழங்குகிறது.

8. ரஃபேல் (Rafale) அதிக சுறுசுறுப்பு கொண்ட போர்விமானம். மிகவும் குறைவான வாய்ப்பிலேயே ராடாரில் தென்படும் தன்மை கொண்டது. பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

9. டகோட்டா (Dakota) இந்திய விமானப்படையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமானம். காஷ்மீர், 1947 போரில் மற்றும் 1971 பங்களாதேஷ் போரில் முக்கிய பங்கு வகித்தது.

10. பிலாட்டஸ் PC-7 (Pilatus PC-7 MK II) இந்திய விமானப்படையின் புதிய பயிற்சி விமானம். 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹார்வர்ட்

11. ஹார்வர்ட் (Harvard) இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பயிற்சியாளர் விமானம். இந்தியாவின் வரலாற்றில் சிறப்பு பங்கு வகிக்கிறது.

12. C-295 இந்திய விமானப்படையின் புதிய போக்குவரத்து விமானம். 10 டன்ன்கள் சரக்கு ஏற்றும் சக்தி கொண்டது.

13. டோர்னியர் 228 (Dornier 228) இரட்டை எஞ்சின் கொண்ட போர்த் திறன் கொண்ட விமானம். பல நோக்கங்களுக்காக கடல் ரோந்துப் பயன்பாட்டுக்கானது.

14. AEW&C வான்பரப்பில் முன்னோக்கி செல்லும் மற்றும் கட்டுப்பாட்டுத் தகவல், அபாய சிக்னல்களை முன்கூட்டியே தரும் சக்தி கொண்டது. 

chennai marina air show

15. மிக்-29 (Mig-29) இரட்டை எஞ்சின் போர் விமானம், பல்வேறு பரிமாணங்களில் செயல்களைச் செய்யக்கூடியது.

16. IL-78 நான்கு எஞ்சின்கள் கொண்ட டேங்கர், 500-600 லிட்டர்கள் வேகத்தில் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது.

மிராஜ்

17. மிராஜ் (Mirage 2000) 4-ம் தலைமுறையின் போர் விமானம். நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட விமானம்.

18. P8i இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம், நீண்டகால புலனாய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக.

19. ஜாகுவார் (Jaguar) மாசு கொண்ட குண்டுகள் மற்றும் முற்றிலும் துல்லியமான ஆயுதங்களை எறியக்கூடிய விமானம். எதிரி நாடுகளை தகர்க்க முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட.

20. சுகோய் 30 MKI (Sukhoi 30 MKI) எல்லா வானிலை சூழ்நிலைகளிலும் செயல்படக் கூடிய பல நோக்கங்களைச் செயல்படுத்தக் கூடிய போர் விமானம்

நேரலை

இதில் நேரில் சென்று காண முடியாதவர்களும் காணும் வகையில் இந்தியா வான்படை தங்களது அதிகார பூர்வ youtube சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்கின்றனர்.

இதுதவிர தூர்தர்ஷன் நேஷனல் மற்றும் தூர்தர்ஷன் தமிழ் தொலைகாட்சிகளிலும் நேரலை செய்யப்படுகிறது.