வாட்ஸ்அப்பில் டெலிட் செஞ்ச மெசேஜ் எப்படி பார்ப்பது - வேறு ஆப்லாம் வேண்டாம்!
வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட செய்தியை பார்ப்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனம் தொடர்ந்து, வாட்ஸ்அப் மென்பொருளை மேம்படுத்தி வருகிறது. தனியுரிமை பாதுகாப்பிற்காக பல அம்சங்களையும் அப்டேட் செய்து வருகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட தகவல்களை படிக்க, மூன்றாம் தரப்பு ஆப்களை பலரும் நாடுகின்றனர். ஆனால், அது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டெலிட் மெசேஜ்
ஏனெனில் அதுபோன்ற செயலிகளால் தீமைகளே அதிகம் விளைகிறது. தற்போது, டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செய்தியை மூன்றாம் தரப்பு ஆப் இல்லாமலேயே பார்க்கலாம். phone settings-க்கு சென்று, அதில் Notifications -ஐ ஆன் செய்து விட வேண்டும்.
பின்னர், More Settings சென்று, Notifications History பார்த்தால், டெலிட் செய்யப்பட்ட செய்திகள் அதில் வரிசையாக தோன்றும். வாட்ஸ்அப் குழு அல்லது தனிநபர்கள் அனுப்பிவிட்டு, டெலிட் செய்த அத்தனை செய்திகளையும் படிக்கலாம். எழுத்து வடிவிலான செய்திகளை மட்டுமே படிக்க முடியும்.
புகைப்படங்கள், வீடியோக்களை மீட்டெடுக்க முடியாது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. குறிப்பாக, ஆண்ட்ராய்டு 11 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும்.
ஐபோன் பயன்படுத்துவோருக்கு வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.