க்ரீன் டீ, பிளாக் டீ தெரியும்; அதென்ன ஒயிட் டீ - குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
ஒயிட் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா?
White Tea
தேயிலை செடியில் உள்ள மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதுமாக விரிவதற்கு முன்னரே பறிக்கப்பட்டு ஒயிட் டீ தயாரிக்கப்படுகிறது.
தேயிலைச் செடியின் குருத்துகள் வெள்ளை நிற இலைகளால் மூடப்பட்டிருப்பதால் ஒயிட் டீ எனக் கூறப்படுகிறது. உடல் எடையை விரைவாக குறைக்க முயற்சி செய்யும் நபர்களுக்கு, இந்த டீ மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
நன்மைகள்
அதிக பசி எடுக்காமல், எடை இழக்கத் தொடங்கும். அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இதன் காரணமாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வாக அமையும்.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை மறையச் செய்கின்ற வெள்ளை டீயில், முதுமை எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கும் பாலிபினால்கள், வெள்ளைத் தேநீரில் அதிகம் காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுநோயையும் தடுக்கிறது.
செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக ஒயிட் டீயை குடித்தால், மலச்சிக்கல் மற்றும் வாய்வுத்தொல்லை நீங்கும்.
க்ரீன் டீயை விடவும், வெள்ளை டீயில் 20-30% வரை உயர் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை இருப்பது குறிப்பிடத்தக்கது.