அடிக்கடி தொண்டை வலி ஏற்படுகிறதா? அப்போ இந்த டீ தான் தீர்வு!

Health Tea Tips Solution Continue மருத்துவம் ThroatPain தொண்டைவலி டீ Liquorice
By Thahir Apr 01, 2022 11:46 PM GMT
Report

தொண்டை வலி மற்றும் சளித்தொல்லைகள் நீங்குவதற்கு அதிமதுரம் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.

அதிமதுரம் சிறப்புக்குரிய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.அதிமதுரம் பொதுவாக நல்ல வாசனையை கொண்டது.

அதிமதுரத்தை கொண்டு டீ தயார் செய்து குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் புண் ஆறும்,சளித்தொல்லை இருக்காது.

அடிக்கடி தொண்டை வலி ஏற்படுகிறதா? அப்போ இந்த டீ தான் தீர்வு! | Continue Throat Pain Solution Tea Health Liquorice

அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கிருமிகள் அழிந்து கற்கள் உருவாவதை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அதிமதுரத்தை கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்று தற்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அதிமதுரம் தூள் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1 டம்ளர்

நாட்டு சர்க்கரை – தேவைக்கு

அதிமதுரம் டீ போடும் முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

பின்னர், அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

இவை கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.

இவை கரைந்த பிறகு கீழே இறக்கி வடிகட்டி குடிக்கவும்.