நாக்கு ஊரும் இஞ்சி எலுமிச்சை ரசம்.. டேஸ்டில் அசந்துடுவீங்க - ரெசிபி வேணுமா?
Tamil nadu
India
World
By Swetha
இஞ்சி எலுமிச்சை ரசம் ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரசம்..
தென்னிந்திய உணவுகளில் ரசம் முக்கிய அங்கம் வகுக்கிறது. அதுவும் தமிழ் வீடுகளில் ரசம் இல்லாத நாளே இருக்காது. தடபுடலான விருந்துகளில் கூட ரசத்துடன் முடித்தால்தான் திருப்தியாக இருக்கும்.
இப்படிப்பட்ட ரசம் சுவையானதாகவும், நற்குணங்கள் நிறைந்தவையாகவும் இருப்பதுடன் கடினமான உணவுகளை எளிதில் செரிமானம் அடையவும் வைக்கிறது. பொதுவாகவே வீடுகளில் தக்காளி ரசம், அப்படி இல்லாவிட்டால் மிளகு ரசம் அவ்வளவுதான் செய்வார்கள்.
ஆனால் ரசத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அப்படி ஒரு தனித்துவமான மற்றும் ஆரோக்கியமான ரசம்தான் இஞ்சி எலுமிச்சை ரசம். அதன் செய்முறை குறித்து விவரமாக பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- தக்காளி - 1
- நறுக்கிய இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 4
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
- மஞ்சள் - அரை ஸ்பூன்
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
- வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
- எலுமிச்சை - அரை பழம்
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
- முதலில் ஒரு அகல பாத்திரத்தில் தக்காளி, இஞ்சி, மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்னர் மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
- சில நிமிடங்கள் அல்லது தக்காளி மென்மையாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.
- பின்னர் ஒரு கரண்டியை வைத்து தக்காளியை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- இப்போது வேகவைக்கப்பட் துவரம்பருப்பை அதில் சேர்க்கவும்.
- துவரம்பருப்பு நன்கு வெந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.
- நன்றாக கலந்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து ரசம் பதத்திற்கு கொண்டு வரவும்.
- இதை 3 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைக்கவும். ஏனெனில் வேகவைத்த பருப்பை நீண்ட நேரம் கொதிக்க வைக்கக்கூடாது.
- ரசம் கொதிக்கும் போது அதில் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
- ரசத்தை தாளிக்க ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் மிளகை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதை ரசத்தின் மீது ஊற்றி நன்கு கிளறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான இஞ்சி எலுமிச்சை ரசம் ரெடி..