புளி , தக்காளி இல்லாமல் ரசம் வைக்க தெரியுமா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க... ரொம்ப ஈஸி ரெசிபி தான்!

food rasam receipe
By Anupriyamkumaresan Aug 09, 2021 11:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உணவு
Report

புளி இல்லாமல் ரசமா என ஆச்சரியப்படுகிறீகளா..? ஆம்…புளியே இல்லாமல் வித்தியாசமான சுவையில் மாங்காய் மற்றும் பருப்பு சேர்த்து மாங்காய் ரசம் செய்து பாருங்கள்.

இதற்கு புளியே தேவையில்லை. மாங்காய் மணமும் அதன் புளிப்பு சுவையும் அடடா…. அருமையான சுவை… இன்னைக்கே டிரை பண்ணி வீட்டில் இருப்பவர்களை அசத்துங்கள்.

புளி , தக்காளி இல்லாமல் ரசம் வைக்க தெரியுமா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க... ரொம்ப ஈஸி ரெசிபி தான்! | Life Style Food Receipe For All

தேவையான பொருட்கள் :

மாங்காய் – 1

நெய் – 1 tsp

துவரம் பருப்பு – 1 tbsp

தக்காளி – 1 ( தேவைப்பட்டால் )

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – சிறிதளவு

சிவப்பு அல்லது காய்ந்த மிளகாய் – 1

கடுகு – 1/4 tsp சீரகம் – 1/4 tsp

மஞ்சள் தூள் – 1/4 tsp

பெருங்காயம் – 1/4 tsp

வெல்லம் – சிறிய துண்டு

மிளகு சீராக பொடி – 1 tsp

உப்பு – தே.அ

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்துமல்லி தழை

செய்முறை :

முதலில் பருப்பு மற்றும் மாங்காய் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். சாம்பாருக்கு குழைய வேக வைப்பதுபோல் விசில் விடுங்கள்.

பின் கடாயில் நெய் விட்டு , கடுகு, சீரகம் , மஞ்சள் துள், மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் தக்காளி, பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

புளி , தக்காளி இல்லாமல் ரசம் வைக்க தெரியுமா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க... ரொம்ப ஈஸி ரெசிபி தான்! | Life Style Food Receipe For All

அடுத்ததாக மிளகு , சீரகப் பொடி சேர்க்கவும். நன்கு வதக்கிய பிறகு கரைத்து வைத்துள்ள பருப்பு , மாங்காய் கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.

வெல்லமும் சேர்த்துவிடுங்கள். இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி தட்டுப்போட்டு மூடுங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் மாங்காய் ரசம் தயார்.