கவலைய விடுங்க..!! கார் வெள்ளத்தில் மூழ்கியதா..? ஈஸ்சியா இன்சூரன்ஸ் வாங்கலாம்..!!
கார், பைக் போன்றவை முற்றிலுமாக பாதிப்படைந்து போனால், அதற்கு எளிதில் எவ்வாறு இன்சூரன்ஸ் வாங்குவது என்பதை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மழை
பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. தாழ்வான இடங்களை தாண்டி பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி சாலையில் நிற்கிறது.
பல மக்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மீட்புப்பணிகளை அரசு முடிகிவிட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து பல பகுதிகளும் பெரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றார்.
இதற்கிடையில், மக்கள் பலரின் வாகனங்கள் குறிப்பாக கார் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகளும் நீரில் முற்றிலுமாக மூழ்கி நிற்கும் வீடியோ மற்றும் படங்களை நாம் சமூகவலைத்தளங்கில் பார்க்க முடிந்தது. காரை எவ்வாறு சரி செய்வது, பணத்திற்கு என்ன செய்வது என பலரும் குழம்பி வருகின்றனர். இந்த தொகுப்பில், எப்படி எளிதில் கார் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணலாம் என்பதை காணலாம்.
இன்சூரன்ஸ் வாங்குவது எப்படி..?
வாகனம் மழை வெள்ள நீரில் மூழ்கி விட்டால் முதலில் காரை ஸ்டார்ட் செய்யும் முயற்சி செய்ய வேண்டாம். தண்ணீர் வடிந்த பின்பு காரை அருகில் உள்ள மெக்கானிக் அல்லது கார் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லலாம். அதேநேரத்தில் வாகனத்தில் எந்த அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது என்பதை புகைப்படம் எடுத்து வைத்து கொள்வது நல்லது. அது இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காட்ட எதுவாக இருக்கும்.
இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இந்த செய்தியை விரைவில் தெரிவிப்பது நல்லது. வாகனம் மழை நீரில் சேதமாகி இருந்தால் அதனை குறித்து போலீசில் சென்று புகார் அளிப்பதும் நலல்து. அதனை கொண்டு FIR அறிக்கை தயாராகும், அதன் அடிப்படியில் தான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் காருக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான பணத்தை வழங்குவார்கள். ஆனால், இது கார் முழுவதும் சேதமானால் மட்டுமே தேவைப்படும்.
முழு வண்டியும் சேதமடையவில்லை என்றால் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் இன்சுரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்த பின் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பணத்தில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்கள் அந்நிறுவனத்திடம் பேரம் பேசி அதிக தொகையை பெற முடியும்.