ஆன்லைனில் இலவசமாக பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை!
உங்கள் பெயரில் பத்திரம் இருக்கிறது.. ஆனால் பட்டா வேறு ஒருவரின் பெயரில் இருக்கிறது என்றால் எப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
பட்டா
தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்வது என்பது இப்போது மிகவும் எளிது.. ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படுகிறது என்றால், கையோடு வருவாய் துறை மூலம் பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள், பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.. தமிழ் நிலம் வெப்சைட் மூலம் பத்திரப்பதிவு செய்த பின்னர், ஆன்லைனிலேயே நீங்கள் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியும். தாசில்தார் ஆபிஸுக்கு போய் அலைய தேவையில்லை.
- பட்டா பெயர் மாற்றம் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு எளிய வழி என்னவென்றால் இசேவை மையம் தான்.இ சேவை மையம் மூலமாக
- கிரையப் பத்திரம்
- செட்டில்மென்ட் பத்திரம்
- பாகப்பிரிவினை பத்திரம்
- தானப் பத்திரம்
- பரிவர்தனை பத்திரம்
- அக்குவிடுதலைப் பத்திரம்
எளியவழிமுறை
ஆகிய ஆறு பத்திரங்களில் உங்கள் பத்திரம் எதுவோ அந்த பத்திரம், வில்லங்க சான்றிதழ், ஏற்கனவே பட்டா யார் பெயரில் உள்ளதோ அந்த பத்திரம் (லேட்டஸ்ட் பட்டா), உங்கள் ஆதார் கார்டு, முகவரி சான்றிதழ்,, வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்(இறந்துவிட்டால் மட்டும்)ஆகியவற்றுடன் சென்றால்,
இசேவை மையத்திலேயே பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.அதற்கு கட்டணம் கட்ட வேண்டும்.இசேவை மையம் மூலம் அப்ளை செய்வது மிகவும் ஈஸியானது.
மேற்கண்ட வழிகளில் எதாவது ஒரு வழியில் பட்டா பெயர் மாற்றம் செய்தவர்கள் ஆதார் கார்டு,, முகவரி சான்று, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கட்டணம் செலுத்திய சான்று உள்ளிட்ட சான்றுகள் உள்ள நகல்களுடன் விஏஓ அலுவலகத்திற்கு சென்று பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த தகவலை கூறுங்கள்.
அடுத்த ஒரு வாரத்தில் உங்கள் பெயருக்கு பட்டா மாறிவிடும். அதனை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்..