அபாயம்..தமிழகத்தில் சிலிண்டர் கிடைப்பது சிக்கலா? குழப்பத்தில் இல்லத்தரசிகள்!
சிலிண்டர் டெலிவரிமேன்கள் போராட்டம் அறிவித்துள்ளதால்பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர்
தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாரத் கேஸ், இன்டேன், எச்.பி. உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களிடம்
கொண்டு சேர்க்கும் பணியில் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெலிவரி மேன்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரிமேன் தொழிற்சங்கம் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
அதன்படி டெலிவரி மேன், மெக்கானிக், ஓட்டுநர்கள், குடோன் கீப்பர், லோடு மேன்கள், பணியாளர் உள்ளிட்டவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
சிக்கலா?
அந்த வகையில் தொழிலாளர் நல சட்டத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது, அகவிலைப்படி உயர்வு, ரூ.12 ஆயிரத்தை தீபாவளி போனசாக வழங்குவது, அரசு விடுமுறை நாட்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 26ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் தங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் சமையல் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.