2 நிமிடம் போதும் - வாட்ஸ் அப்பில் திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி தெரியுமா?
வாட்ஸ் அப்பில் ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்வது குறித்து தெரிந்து கொள்வோம்.
தரிசன டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், தரிசனத்தை எளிதாக்கும் வகையில் ஆந்திர பிரதேச அரசு டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி "மன மித்ரா" என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், மொபைலை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் எளிதில் தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு
இச்சேவையின் கீழ் திருமலை, விஜயவாடாவின் துர்கா மல்லேஸ்வர சுவாமி, ஸ்ரீசைலம், ஸ்ரீகாளஹஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம் மற்றும் துவாரகா போன்ற கோவில்களின் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் நம்பரான 9552300009- இந்த எண்ணை சேவ் செய்து "டெம்பிள் புக்கிங் சர்வீசஸ்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் பணம் செலுத்தி விட்டு செயல்முறையை தொடரவும். பணம் செலுத்தப்பட்டதும் உங்களுடைய ஈ-டிக்கெட் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பப்படும்.
15 நாட்களில் இந்த வாட்ஸ்அப் சேவைகள் மூலம் 2.64 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அடுத்த 45 நாட்களுக்குள் 161 கூடுதல் சேவைகளை கொண்டு வரவும் ஆந்திரா அரசு முடிவு செய்துள்ளது.