டிகிரி மட்டும் போதும்; ரயில்வேயில் வேலை - என்ன செய்ய வேண்டும்?
பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஷன் கண்ட்ரோலர்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது செக்ஷன் கண்ட்ரோலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 368 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த செக்ஷன் கண்ட்ரோலர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 14-10-2025 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப தகுதி
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதிகபட்ச வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
முதலில், கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (CBT) நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக ஆவண சரிபார்ப்புக்கும் (Document Verification), இறுதியாக மருத்துவ பரிசோதனைக்கும் (Medical Examination) அழைக்கப்படுவார்கள். இந்த மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 14-10-2025. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு, https://www.rrbchennai.gov.in/ என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.