7-வது வீட்டில் குருபகவான் ;பிரதமர் மோடி முதல் விஜய் வரை..2025 எப்படி இருக்கும் தெரியுமா?
2025-ல் அரசியல் தலைவருக்கு எத்தகைய ராசிபலன் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராசிபலன்
புத்தாண்டு பிறந்துவிட்டது. 2025 ஆம் ஆண்டில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, மேன்மை, தொழில், வெற்றி தர வேண்டும் என்பது அனைவரின் ஆசை.அது குறித்து ஜோதிடத்தில் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
அந்த வகையில், 2025-ல் அரசியல் தலைவருக்கு எத்தகைய பலன் கிடைக்கும் என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று ஜோதிட ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், பிரதமர் மோடிக்குக் குருபகவான் 7-வது வீட்டில் உள்ளதால் அனைத்து துறைகளிலும் எடுக்கும் திட்டங்களும், முடிவுகளும் வெற்றி கிடைக்கும்.
மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் அதிக ஆதரவைப் பெற்றுத் தந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் ஜாதகத்தில் சனி 4-வது இடத்தில் இருப்பதால் எதிர்பாராத சவால்கள் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட ஆய்வு
அந்த வரிசையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜாதகத்தில் குரு 11 இடத்தில் இருக்கிறார். இதனால் அவர் எடுக்கும் முடிவுகளுக்குச் சாதகமாக இருக்கும்.மேலும் 8 வது இடத்திலிருந்து மீன ராசிக்குச் சனி பகவான் செல்வதால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் மறுமலர்ச்சி உண்டாகும்.
தவெக கழகத் தலைவர் விஜய், ஜாதகத்தில் 8-வது வீட்டில் சனி பகவான் உள்ளது.இதனால் விஜய் தனது அரசியல் பயணத்தில் சற்று கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியது இருக்கும். எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்க வாய்ப்பு பிரசாரத்தைத் தொடங்கலாம்.