வீட்டில் இந்த மாதிரி பொம்மைகள் இருக்கா?வாஸ்து சாஸ்திரத்தில் என்ன அர்த்தம் -அவசியம் தெரிஞ்சுக்கணும்!
வீட்டில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் சீன வாஸ்து பொம்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீன வாஸ்து பொம்மை
வீட்டில் நாம் வைத்திருக்கும் அழகழகான பொம்மைகளுள், வாஸ்து பொம்மைகளும் அடங்கும். பொதுவாக நம்முடைய பூஜை அறையில் குபேரர் ஆமை உள்ளிட்ட பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.ஆனால் சீன வாஸ்து ( பெங் சுயி) பொம்மைகள் வைத்து வழிப்பட்டால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
வாஸ்து ஆமை பொம்மை செல்வத்தைத் தரும் என்றும் கூறப்படுகிறது. உறவுகளில் உருவாகும் சிக்கல்களையும் நீக்குமாம். கணவன் மனைவி இடையே அடிக்கடி நடக்கும் வாக்குவாதங்கள் குறையும். அன்பு பெருகும். வீட்டிற்குள் வரும் கெட்ட அதிர்வலைகளைத் தடுத்து நிறுத்தும்.
என்ன பலன்?
பணப் பூனையின் கைகாட்டும் பாதம் செல்வத்தின் அடையாளம் ஆகும். இதை வீட்டில் வைத்தால் அதிஷ்டம், பணம், செழிப்பு, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இவை எதிர்மறையான ஆற்றலை அழித்து, வீட்டின் நிதி நிலையை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
தங்க மீன் சிறப்பு வாய்ந்தது. வீட்டில் இரண்டு மீன்கள் கொண்ட பொம்மைகளை வைத்திருந்தால் செல்வத்திற்குப் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.நீரூற்று செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமாகும்.இது வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்தால் சிறப்பு. இதைக் குளியல் அறை அருகில் வைக்கக்கூடாது.