துபாயில் இருந்து இந்தியாவிற்கு எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?
துபாயில் இருந்து இந்தியாவிற்கு எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம் என தெரிந்துக் கொள்வோம்.
தங்கம்
தங்கம் விலை மலிவாக கிடைக்கும் நாடுகளில் ஒன்று துபாய். அங்கிருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கொண்டு வருவதற்கு சில விதிகள் உள்ளன.

அதன்படி, வரி செலுத்தாமல் பெண்கள் துபாயிலிருந்து ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள 40 கிராம் தங்கத்தை கொண்டு வரலாம். அதே, ஆண் பயணிகள் 20 கிராம் தங்கம், தங்க நாணயங்கள், நகைகள் அல்லது கட்டிகள் வடிவில் கொண்டு வரலாம். இந்த வரம்பைத் தாண்டி தங்கத்தை கொண்டு வருபவர்களுக்கு வரி விதிக்கப்படும்.
துபாய் - இந்தியா
அந்த வகையில், 3% முதல் 10% வரை வரி விதிக்கப்படலாம். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தங்கத்தை கொண்டு வரலாம். ஆனால், அது 40 கிராமுக்கு மட்டுமே பொருந்தும். இதற்கு, அவர்களுக்கு அடையாள அட்டை தேவை. குழந்தைகளுக்கு 40 முதல் 100 கிராம் வரையிலான தங்கத்திற்கு 3 சதவீதமும், 100 முதல் 200 கிராம் வரையிலான தங்கத்திற்கு 6 சதவீதமும்,

200 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கத்திற்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. கொள்முதல் ரசீது, தூய்மை சான்றிதழ் மற்றும் தங்கக் கட்டியின் வரிசை எண் ஆகியவை இருக்க வேண்டும். தவறான தகவலை வழங்கினால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது தங்கம் பறிமுதல் செய்யப்படலாம்.
அங்கு ஜனவரி 2025 நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8,718 ஆகவும், 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,996 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.