புக் பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? அமைச்சர் தாக்கு
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? என அமைச்சர் அன்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அறிவு எப்படி வளரும்?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம்,
விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்ற புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அமைச்சர் கேள்வி
அதற்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும்? என்று தெரிவித்தார். முன்னதாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டில் இரண்டு முறை அதாவது, ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை இறுதி முடிவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிளஸ் 1 வகுப்பின் பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.